திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (14:58 IST)

#GoBackModi : நாளைய விசிட்டுக்கு இன்றே ஆரம்பித்த நெட்டிசன்கள்!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #GoBackCowardModi, #GoBackModi ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. 

 
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வரும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.
 
பிரதமர் மோடி நாளை வருவதால் நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனிடையே இன்று முதலே சமூக வலைத்தளமான டிவிட்டரில் #GoBackCowardModi, #GoBackModi ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.