5 வயது குழந்தைக்காக 6 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ரத்து! – மத்திய அரசு அறிவிப்பு!
5 வயது குழந்தையின் மருத்துவத்திற்காக இறக்குமதியாகவுள்ள மருந்திற்கு ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் மருந்து உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டீரா என்ற குழந்தை அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ள சூழலில் இதற்கான ஜிஎஸ்டி வரி மட்டுமே ரூ.6 கோடி வருகிறது.
இந்நிலையில் தங்கள் நிலையை எடுத்து கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள டீராவின் பெற்றோர் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் குழந்தைக்கு குறைந்த விலையில் மருந்து வாங்க இயலும் என கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று குழந்தைக்காக வாங்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.