செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (07:03 IST)

இந்தியாவை வழிநடத்துவது அந்த 4 பேர்கள் தான்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவை மொத்தம் நான்கு பேர்கள் தான் வழி நடத்தி இருக்கிறார்கள் என்றும் அந்த நான்கு பேர்களுக்காகவே வேளாண் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும் மக்களவையில் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று மக்களவை கூடியதும் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய போது ’வேளாண் துறைக்கு ஊக்கம் அளிப்பதாக மூன்று வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றும், இந்த சட்டத்திற்கு தவறான சாயம் பூசி காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்வதாகவும், இந்த சட்டங்களை திசைதிருப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் வேண்டுமென்றே பொய் பிரச்சாரங்களை செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார் 
 
இதனை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசிய போது ’நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை அழிக்கும் நோக்கத்தில்தான் இந்த வேளாண் சட்டங்கள் இருக்கின்றது என்றும், இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் கூறினார் 
 
மேலும் தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு சாதகமாக இந்த வேளாண் சட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இந்தியாவையே நான்கு பேர்கள் தான் வழி நடத்தி வருகிறார்கள் என்றும் அந்த நான்கு பேர்களுக்கு ஆகவே இந்த வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் அந்த நான்கு பேர் யார் என அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்