1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (08:49 IST)

சென்னை வரும் மோடியின் ப்ளான் என்ன??

சென்னை வரும் பிரதமர் மோடியின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

 
பிரதமர் மோடி நாளை மறுநாள் தமிழகம் வருவதையோட்டி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. மேலும், கலைவாணர் அரங்கில் முக்கிய சந்திப்புகளுக்காக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை வரும் பிரதமர் மோடியின் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
 
வெளியாகியுள்ள தகவலின் படி, வரும் 14 ஆம் தேதி ஞாயிறு காலை 7:50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.35க்கு மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
 
அங்கிருந்து 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்யேக ஹெலிபேடுக்கு காலை11 மணிக்கு வரும் பிரதமர் மோடி,  11.15 அளவில் நேரு உள்விளையாட்டு மைதான அரங்கிற்கு சாலை மார்க்கமாக செல்கிறார்.
 
12.30 மணி வரை பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி,12.55 மணிக்கு மீண்டும் 1 .10 நிமிடங்களுக்கு ஹெலிபேடுக்கு செல்கிறார்.
 
அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1 .30 மணிக்கு விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி, இந்திய விமானப்படை விமானத்தில் கொச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்குசெல்கிறார் என மத்திய அர்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.