செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (14:55 IST)

பிரதமர் வருகை: சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

 
கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.
 
கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
 
ராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம் எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரைசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
 
அண்ணாசாலையிலிருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.
 
சவுத்கொனல் ரோட்டில் இருந்து காந்தி சாலை நோக்கி வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம்.