தொடர்புடைய செய்திகள்
- கேரள குப்பைகளை தமிழகத்தில் கொட்டுவதா? – கமல்ஹாசன் கண்டன ட்வீட்!
- வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!
- முகக்கவசத்துக்கு 200, எச்சில் துப்பினா 500 அபராதம்! – சென்னையில் புதிய உத்தரவு!
- பொதுமக்களுக்கு உதவ அனுமதி தாங்க; தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை!
- முக கவசம் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம்! – கோவை மாநகராட்சி கறார்!
கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை! – உயர்நீதிமன்றம் உத்தரவு!
தென்மண்டல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சமீபத்தில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தமிழக முதன்மை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அரசால் நியமிக்கப்பட்டார். ஆனால் பசுமை தீர்ப்பாய விதிகளின்படி பசுமை தீர்ப்பாயத்தில் 5 வருட பணி அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே நிபுணர் குழு உறுப்பினராக முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணையில் கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, முறையான விளக்கம் அளிக்கவும், அதுவரை கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.
