ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (12:31 IST)

கேரள குப்பைகளை தமிழகத்தில் கொட்டுவதா? – கமல்ஹாசன் கண்டன ட்வீட்!

கேரள மருத்துவ கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டுவதாக நீண்ட நாளாக இருந்து வரும் புகார் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளாவிலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சிலர் தமிழக எல்லை பகுதியில் கொட்டி செல்வது போன்ற புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இதுகுறித்து அவ்வபோது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் முறைகேடாக இது போல குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “கேரளத்தில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை பொள்ளாச்சிக்கு அருகே உள்ள தோட்டத்தில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறதாம். சூழலை அழிக்கும் சமூகவிரோத செயல்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இரு மாநில அரசும்  இதை உடனடியாகக் கவனிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.