முக கவசம் அணியாவிட்டால் கட்டாயம் அபராதம்! – கோவை மாநகராட்சி கறார்!
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி தொடங்கியுள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு பொறுத்து மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை அறிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கோயம்புத்தூரில் கொரோனா பரவலுக்கு எதிராக மாநகராட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கோயம்புத்தூரில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் கட்டாயம் ரூ.500 அபராதம் என கூறப்பட்டுள்ளது.