வேகமெடுக்கும் கொரோனா; தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம்!
Prasanth Karthick|
Last Modified வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (12:08 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் முன்னதாகவே செலுத்தப்பட்டு வந்தாலும் பலர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாமலே இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் தடுப்பூசி செலுத்துவதையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்களாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை விட இந்த வாரம் 50% அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.