தொடர்புடைய செய்திகள்
- திமுக ஆட்சியைக் கலைப்பதுதான் சரி… மாரிதாஸின் டிவிட்டுக்கு திமுக எம்பி சவால்!
- இன்றுடன் முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்: மீனவர்கள் உற்சாகம்!
- நேற்று ஒரே நாளில் மதுவிற்பனை இத்தனை கோடியா?
- ரேசன் கடைகளில் இன்று முதல் ரூ.2000 இரண்டாவது தவணை: அரசு அறிவிப்பு
- ஆங் சான் சூ ச்சீ: மியான்மர் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது
அந்தரங்க பேச்சு, பண பறிப்பு... போலீஸ் தேடுதலால் கேமர் மதன் தலைமறைவு
டாக்சிக் மதன் 18+ என்ற சேனலை உருவாக்கி ஆபாசமாகவும் பேசி பதிவிட்ட நபர் தலைமறைவு.
ஆம், டாக்சிக் மதன் 18+ என்ற சேனலை உருவாக்கி அதில் பப்ஜி கேம் விளையாடுவதை நேரலையாக ஒளிபரப்புவது மட்டுமில்லாமல் ஆபாசமாகவும் பேசி பதிவிட்ட மதன் தற்போது போலீஸார் வலையில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.
தனது சேனலில் பெரும்பாலான பார்வையாளர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களை கவர்வதற்காக பெண் குறித்து மிகவும் இழிவாக பேசி பதிவிட தொடங்கி, கேமில் கிடைக்கும் பணத்தில் ஒரு பங்கை ஆதரவற்றோருக்கு உதவி செய்ய இருப்பதாகவும், உங்களால் முடிந்த பணத்தை அனுப்பவும் என கேட்டு பணம் பறிக்கும் செயலிலும் மதன் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மோசடி செயலிலும், பெண்களை ஆபாசமாகவும் பேசி வீடியோ வெளியிட்டு வந்த மதன் மீது ஏராளமான புகார்கள் குவிய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவிற்கு புகார் ஒன்று வந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கிடையே, போலீசார் தேட தொடங்கியதால் மதன் தலைமறைவாகி விட்டார்.
