தொடர்புடைய செய்திகள்
- பழைய பேருந்துகளை நடுக்கடலில் தூக்கிப்போடும் இலங்கை! – தமிழக மீனவர்கள் கண்டனம்
- சாட்டிலைட் போன் சந்தா உயர்வு: மீனவர்கள் கவலை
- மீன் பிடி தடைகாலத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்… மீனவர்கள் கோரிக்கை!
- 4 நாட்களுக்கு பலத்த காற்று; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
- காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
இன்றுடன் முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்: மீனவர்கள் உற்சாகம்!
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றுள்ளனர். இன்று முதல் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதால் மீன் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் என தமிழக அரசு அறிவிக்கும். மீன்களின் இனப்பெருக்கத்தை பெருக்கும் வகையில் இந்த தடைக்காலம் அறிவிக்கப்படும் என்பதும் இந்த மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடைகாலம் விதிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் அந்த தடைக்காலம் முடிந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை சென்னை முதல் குமரி வரை உள்ள மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளில் உற்சாகமாக அதிகாலையே கடலுக்குள் சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று முதல் மீன் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
