தொடர்புடைய செய்திகள்
- திருச்சியில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ நிறுவனம்!!
- தனியார் உணவகங்கள் முற்றிலும் மூடல்; அனைவருக்கும் அன்னதானம்! – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
- உக்ரைனிலிருந்து வேகமாக வெளியேறும் இந்தியர்கள் – கட்டுப்பாடுகளை தளர்த்திய மத்திய அரசு!
- விஜய்க்கு ஓட்டு கேட்டு வந்த எம்.ஜிஆர்! – திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்!
- திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருச்சி-திருப்பதி விமான சேவை மீண்டும் தொடக்கம்!
திருச்சியில் இருந்து திருப்பதி செல்லும் விமானத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் மீண்டும் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி சென்றடையும். அதேபோன்று திருப்பதியில் இருந்து 5 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்
இவ்வாறு இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது திருச்சி மற்றும் திருப்பதி இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது அடுத்து ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
