1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (19:23 IST)

துணை ராணுவப்படை கோரிக்கை: தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்புக்கு துணை ராணுவப் படையை அழைக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
நாளை நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு உத்தரவிட அதிமுக கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்தது.
 
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது துணை ராணுவ படை தேவையில்லை என்றும் காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் டிஜிபி தரப்பில் பதிலளிக்கப்பட்டது
 
இதனையடுத்து கோவையின் அனைத்து சாவடிகளிலும் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததை அடுத்து இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அதிமுகவின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது