திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (09:02 IST)

தனியார் பள்ளிகளில் கட்டாய இலவச கல்வி சட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த விண்ணப்பங்கள்..!

school student
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கடும் போட்டி போடுவதாகவும், சென்னையில் மட்டும் 8000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் இடங்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலமாக குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 636 தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்டிஇ-க்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதால், பெற்றோர் முன் குலுக்கல் நடைபெறுகிறது என்றும் குலுக்கலில் தேர்வு செய்த குழந்தைகளுக்கு உடனடியாக அட்மிஷன் போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்டிஇ திட்டத்தின்கீழ் அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறமுடியும்.  பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva