வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:34 IST)

இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்துவதா? குழந்தைகளுடன் பெற்றோர்கள் புகார்..!!

student compliant
கோவை அருகே இலவச கல்வி என கூறிவிட்டு வசூல் வேட்டை நடத்தும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர்.
 
கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக்கான நிதி உதவியை அளித்து வருகிறது. 
 
ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவச கல்வி என்று கூறி தங்கள் குழந்தைகளை சேர்க்க செய்து தற்பொழுது ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாகவும், இதனைக் கேட்க போனால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
 
stundents protest
வசூல் வேட்டை நடத்தும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். 

 
மனு அளிக்க வந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.