வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (07:51 IST)

பேருந்தில் டிக்கெட் புக் செய்தால் குலுக்கல் முறையில் ரூ.10 ஆயிரம் பரிசு: அமைச்சர் சிவசங்கர்..

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ரூபாய் 10,000 பரிசு வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் வார இறுதி நாள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் முன்பதிவு செய்தும் பயணிகளில் மூன்று பேரை குலுக்கல் மூலம் தேர்வு செய்து அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
 
இதன்படி ஜனவரி மாதத்தில் சாதாரண நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளின் மூன்று பேர்களை அவர் தேர்வு செய்துள்ளார் என்பதும் அவர்கள் இசக்கி முருகன் (பயணசீட்டு எண்: T50959052) , சீதா (பயணசீட்டு எண்: T51210787), இம்தியாஸ் ஆரிப் (பயணசீட்டு எண்: T51655633) ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதன் மூலம் பயணிகளுக்கு  அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் ஆர்வம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva