1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (08:04 IST)

12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி.. ரூ.450க்கு சிலிண்டர்.. ம.பியில் பாஜக வாக்குறுதி..!

jp nadda
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி, 450 ரூபாய்க்கு மானிய விலையில் சிலிண்டர்,  ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை கல்வி வரை இலவசம், அரசு பள்ளிகளில்  காலை மற்றும் மதிய உணவு திட்டம்,  புதிய நெடுஞ்சாலைகள், கோதுமைக்கு 2500 ரூபாய் கொள்முதல் திட்டம், நலிந்த பிரிவினருக்கு இலவச வீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.

பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் முதல்வர் வேட்பாளர் சிவராஜ் சவுகான் ஆகியோர் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Edited by Siva