வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (19:03 IST)

பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

school
தமிழக பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு விடுமுறை என்பதும் ஏப்ரல் 15-ஆம் தேதி புனித வெள்ளி அன்று விடுமுறை என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் சனிக்கிழமை ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது என்றும் அதனையடுத்து 17 ஆம் தேதி ஞாயிறு விடுமுறை என்றும் விடுமுறை முடிந்து 18ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து ஏப்ரல் 14 முதல் 17-ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.