புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2025 (19:04 IST)

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

congress
டெல்லியில் இன்று தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் தொங்கு  சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
70 தொகுதிகளை கொண்ட டெல்லி மாநில சட்டமன்றத்திற்கு இன்று வாக்குப்பதிவு நடந்த நிலையில், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. 
 
இன்று பதிவான வாக்குகள், வரும் எட்டாம் தேதி எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அன்றைய தினம் மதியத்திற்குள் ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரிவித்துவிடும். 
 
ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா அல்லது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 
 
இதற்கு பதில் கூறிய காங்கிரஸ் கட்சியின் பவன் ஜெயராம், கடந்த இரண்டு தேர்தல்களை போலவே டெல்லி மக்கள் தீர்க்கமான முடிவை கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. டெல்லி மக்களுக்கு எந்த குழப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அப்படி ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், இன்னொரு தேர்தல் நடக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran