18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?
இந்த சமய விதிமுறைகளை பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் திடீரென நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீக்கப்பட்டவர்கள் விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளலாம் என்று அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணிபுரிய தேவஸ்தானம் பரிந்துரை கடிதம் தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தான பணியில் சேரும்போது இந்துக்கள் எனக் கூறி ஆதாரங்களை சமர்ப்பித்து, அதன் பிறகு வேறு மதங்களை பின்பற்றி வருவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்து வருகிறது.
இந்த புகாரில் தொடர்புடையவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், இந்துக்கள் எனக் கூறி பணியில் சேர்ந்த 18 பேர் நேற்று வேறு மதங்களில் கலந்து கொண்டதை தேவஸ்தான அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து, இந்துக்கள் எனக் கூறி பணியில் சேர்ந்த வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு மீது நடவடிக்கை எடுக்க அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளதால், 18 பேர்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வேண்டுமெனில் அவர்கள் விருப்ப ஓய்வு வாங்கிக் கொள்ளலாம் என்றும், அல்லது அரசின் பிற துறைகளில் பணியாற்ற விரும்பினால் அதற்கான பரிந்துரைக் கடிதம் கொடுக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Edited by Siva