ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified சனி, 9 ஏப்ரல் 2022 (11:04 IST)

தொடர் விடுமுறை - வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

தொடர் விடுமுறை வர இருப்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 
அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
 
அதன்படி தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி 13 ஆம் தேதி கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன. 16 ஆம் தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதாவது சிறப்பு பஸ்கள் விழுப்புரம், சேலம், வந்தவாசி, வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், நெய்வேலி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.