தொடர்புடைய செய்திகள்
- சங்க காலத்திலிருந்தே கள் குடித்தோம்; இப்போது தடையா? – போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!
- மக்களை திசை திருப்பவே அதிமுகவினர் மீது ரெய்டு! – கே.பி.முனுசாமி காட்டம்!
- ”தகுதிமிக்க இவர்களை தலைவராக்குங்கள்”; கமல்ஹாசன் கோரிக்கை! – வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
- பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் சத்துணவு வழங்கப்படும்! – தமிழக அரசு!
- பிரபல நடிகை கொலை.... அதிர்ச்சி சம்பவம்
எப்போ வேணாலும் ரெய்டு நடத்துங்க.. ஐ யாம் வெயிட்டிங்.! – ஜெயக்குமார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடந்து வரும் லஞ்சஒழிப்பு துறை சோதனைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட பலர் வீட்டில் சமீப காலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்ததை தொடர்ந்து தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கே.பி.அன்பழகன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “திமுக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழலில் எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் கவனத்தை திசைதிருப்ப இந்த ரெய்டுகளை நடத்துகிறது. முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது என்றால் நானும் ரெய்டுக்கு தயார். லஞ்ச ஒழிப்புத்துறை எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வரலாம்” என்று தெரிவித்துள்ளார்.
