புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (12:39 IST)

தவறு செய்ய துணை புரிந்தால் யூட்யூபும் குற்றவாளியே! – கிளை நீதிமன்றம் உத்தரவு!

யூட்யூப் வீடியோக்களை பார்த்து பலர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைவரது கையிலும் மொபைல் உள்ள நிலையில் யூட்யூபில் வீடியோ பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கலை பொருட்கள், உணவு செய்வது உள்ளிட்டவற்றை யூட்யூபில் பார்த்து செய்வது தொடங்கி ஏடிஎம் கொள்ளை வரை ஆபத்தான சில விஷயங்களுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் கிடைப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் மதுரை உயர்நீதிமன்ற கிளை “தவறுக்கு துணை புரிந்தால் யூட்யூபும் குற்றவாளியே.. யூட்யூபில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி போன்ற ஆபத்தான செயல்களுக்கு கூட வீடியோ கிடைக்கிறது. சில நல்ல விஷயங்கள் யூட்யூபில் இருந்தாலும் இதுபோன்ற ஆபத்தான வீடியோக்களை தடை செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மொத்தமாக யூட்யூபை தடை செய்தால் என்ன?” என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், பதில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.