வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 12 மார்ச் 2022 (08:00 IST)

புழல் சிறையிலிருந்து விடுதலையானார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வழக்கிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் அவர் சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு, அனுமதியின்றி போராட்டம் நடத்திய வழக்கு மற்றும் நில மோசடி வழக்கு ஆகிய மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
 
 இந்த நிலையில் நேற்று மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அவர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்
 
 நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது என்பதும் திருச்சியில் காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.