திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (12:57 IST)

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை! – இலங்கை நீதிமன்றம்!

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் என கடற்கரையோரத்தை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மாதம் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.