1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. former minister dindugul srinivasan hospitalized

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!

திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சற்றுமுன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் உடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற அவருக்கு சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நலம் விரைவில் தேறி விசா செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் உடல்நிலை குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை.. 200 கேள்விகள் கேட்க முடிவு