1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Forest department request to people for dont bursting crackers

”பட்டாசு வெடிக்காதீர்கள், ப்ளீஸ்”.. முதுமலை மக்களுக்கு வலியுறுத்தல்

வெடி
முதுமலைக் காடுகளில் உள்ள வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யாமல் இருக்க, பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் மசினகுடி, பொக்காபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அக்கிராம மக்களுக்கு அப்பகுதியில் உள்ள விடுதி நிர்வாகத்தினருக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்குமாறு வனத்துறை சார்பாக கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த கடிதத்தில் பட்டாசு வெடிப்பதால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுமெனவும், மேலும் விலங்குகள் வழி தவறி உருக்குள் வர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த கடிதத்தில், வனவிலங்குகளின் குட்டிகளுக்கு பட்டாசு சத்தம் பெறும் பாதிப்பை அளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதலால் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து கிராம மக்கள் யாரும் பட்டாசுகள் வெடிக்காமல் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் தீபாவளியை கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
’பிகில்’ படத்துக்கு திகில் கிளப்பிய அமைச்சர்கள் ...! சோகத்தில் விஜய் ரசிகர்கள் !