தீபாவளிக்கு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம்
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளியில் பொது மக்கள் பட்டாசு வெடிக்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன் படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மக்கள் வெடி வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம், குடிசை பகுதிகள், புனித ஸ்தலங்கள் ஆகிய பகுதிகளில் வெடி வெடிக்ககூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாசில்லா தீபாவளியை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு, வெடி வெடிக்க கட்டுப்பாடுகள் அளித்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.