வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 அக்டோபர் 2019 (07:11 IST)

2020ஆம் ஆண்டின் தமிழக அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

2020 ஆண்டுக்கான அரசு விடுமுறைகள் நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி குடியரசு தினம், ஆயுதபூஜை ஆகியவை ஞாயிற்றுக் கிழமைகளிலும் , பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகின்றது
 
அடுத்த ஆண்டு மொத்தம் 23 அரசு விடுமுறை தினங்கள் இடம் பெற்றுள்ளன. ஜனவரி 15ம் தேதி புதன்கிழமையன்று பொங்கல் திருநாள் மற்றும் அதனை தொடர்ந்து திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என அடுத்தடுத்து விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த வாரமே விடுமுறை வாரமாக இருக்கும். அதை தவிர அடுத்த ஆண்டு வேறு நீண்ட விடுமுறை இல்லை.
 
சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் மொத்தம் 7 நாட்கள் விடுமுறை அடுத்த ஆண்டு வருவதால் மொத்தமுள்ள 23 23 நாட்களில் 16 நாட்கள் மட்டுமே மற்ற கிழமைகளில் விடுமுறை அடுத்த ஆண்டு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது