திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (12:38 IST)

கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
கே.ஆர்.பி. அணையில் இருந்து 1,176 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுவதாகவும், இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்றும், ஆற்றின் கரையை கடக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 கர்நாடக மாநிலத்திலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை ஆகியவை காரணமாக கேபிஆர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி  அணையில் இருந்து 1176 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran