1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. AIADMK protest against Karnataka government

கர்நாடக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்பாட்டம்

admk
நாகப்பட்டினம் மாவட்ட  அதிமுகவினர்  உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும் இன்று கண்டன  ஆர்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அதிமுக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி  பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும்; குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமலும் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த விடியா திமுக அரசைக் கண்டித்தும்;

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும்;

குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35,000/- ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது’’என்று தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்