காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை கூடுகிறது.. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை மறுநாள் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்க இருந்த நிலையில் இந்த கூட்டம் நாளையே நடப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு நாளை கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக அரசு மனு அளித்துள்ளது. இந்த மனுவும் விசாரணை செய்யப்படவுள்ளது.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் கூடிய நிலையில் தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவு நாளைய கூட்டத்தில் உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Edited by Siva