செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (11:57 IST)

பஞ்சுமெத்தை குடோனில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான மெத்தைகள் எரிந்து நாசம்!

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷேக்(48). இவர் கோவைப்புதூர் அறிவொளி நகரில் பஞ்சு மெத்தை குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல அவர் குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். 
 
இந்நிலையில் இன்று காலை குடோனுக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள, மள என எரிய தொடங்கியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மதுக்கரை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். 
 
மேலும் நான்கு தீயணைப்பு வாகனங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் அங்கு சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சில மணி நேரம் போராடி பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் சில லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு மெத்தைகள் தீயில் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.