1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mask compulsory in theaters says tn govt

திரையரங்குகள் உள்பட முக்கிய பகுதிகளில் மாஸ்க் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

Face Mask
தமிழகத்தில் திரையரங்குகள் உட்பட ஒரு சில முக்கிய பகுதிகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று கூட தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கையை எடுத்து வரும் தமிழக அரசு தற்போது திரையரங்குகள் உள்பட ஒரு சில முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திரையரங்குகள், கலை அரங்குகள் ஏசி அரங்குகள் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இருப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
காரைக்காலை அடுத்து தூத்துக்குடியில் கொரோனாவிற்கு ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!