வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (10:48 IST)

கலாஷேத்ரா விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் மூவர் டிஸ்மிஸ்

dismissed
கலாஷேத்ரா விவகாரத்தில் நேற்று நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மூன்று பேர் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நான்கு பேராசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நால்வரில் ஹரி பத்மன் என்பவர் மட்டும் சஸ்பெண்டில் இருப்பதாகவும் மற்ற மூவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கலாஷேத்ரா பாலியல் புகாரில் சிக்கிய சஞ்சீத் லல், சாய் கிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய மூவரும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவிகளின் கோரிகையை கோரிக்கையை ஏற்று இது குறித்து எழுத்து பூர்வமான அறிவிப்பை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran