1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (11:44 IST)

ஏப்ரல் 7ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து: தொண்டர்கள் குழப்பம்..!

ADMK
ஏப்ரல் ஏழாம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏப்ரல் ஏழாம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பதில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டங்கள் அடுத்தடுத்து செய்யப்படுவதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 
 
இந்த நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏப்ரல் 7 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்தால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று அதிமுக தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
Edited by Mahendran