தொடர்புடைய செய்திகள்
- மீனவர்களுக்காக எந்நேரமும் என் வீட்டுக் கதவு திறந்திருக்கும்: ஆளுனர் ரவி
- 77 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா.. திருப்பி அனுப்பிய ஆளுனர்..!
- 2வது முறையாக மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
- முதல்வர் முக.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற டெல்லி முதல்வர்!
- தமிழக ஆளுனரை அடுத்து கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தெலுங்கானா ஆளுனர்..!
ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!
ஆளுநருக்கு ஒதுக்கப்படும் டிஸ்க்ரினரி ஃபண்டு தொகை ரூ.2 கோடி குறைக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது என்பதும் ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று கூறிய போது டிஸ்க்ரினரி என்ற இனத்தில் ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 3 கோடியாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பல்வேறு இனங்களில் அரசு ஒதுக்கிய நிதியை ஆளுநர் மாளிகை செலவிட்ட விதம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
