1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (14:01 IST)

மீனவர்களுக்காக எந்நேரமும் என் வீட்டுக் கதவு திறந்திருக்கும்: ஆளுனர் ரவி

மீனவர்களுக்காக எந்த நேரமும் என் வீட்டு கதவு திறந்திருக்கும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார் 
 
ராமநாதபுரம் அருகே தேவிபட்டணம் என்ற பகுதியில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ரவி இன்று கலந்துரையாடினார். அப்போது நாட்டின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்றும் பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின, குடியரசு தின விழாக்களில் மீனவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மீனவர்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மீனவர்களுக்காக எந்த நேரமும் என் வீட்டின் கதவை திறந்து இருக்கும் என்றும் எந்த நேரமும் மீனவர்கள் என்னை அணுகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran