1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (10:30 IST)

தமிழக ஆளுனரை அடுத்து கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தெலுங்கானா ஆளுனர்..!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்பட பல மசோதாக்களை தமிழக ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு உள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டிய நிலையில் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் தமிழக ஆளுநரை போல் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், தெலுங்கானா சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்கலை கிடப்பில் போட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு நேற்று நிலுவையில் உள்ள மூன்று மசோதாக்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 
 
நேற்று இந்த வழக்கு விசாரணை செய்து கொண்டிருந்தபோது மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் இதனை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். மேலும் இரண்டு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று மசோதாக்கள் மட்டுமே தற்போது ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran