தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்!
- தமிழகத்தை போலவே தீர்மானம்.. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டும் டெல்லி முதல்வர்..!
- இளநிலை மருத்துவப் படிப்பு: நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
- தமிழகத்தில் 500ஐ நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு.. சென்னையில் எவ்வளவு?
- தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. இன்னும் அதிகரிக்க வாய்ப்பு என தகவல்..!
முதல்வர் முக.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற டெல்லி முதல்வர்!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சட்ட மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த முடிவெடுத்துள்ளார்.
பாஜக ஆளாத மாநிலங்களில் சட்ட மசோதாக்கள் மீதான தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று தமிழ் நாடு முதல்வர் முக.ஸ்டாலின் வலியுறுத்தி, பாஜக ஆளாத அனைத்து மா நிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டுகள் கூறினார்.
மேலும், தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போல் டெல்லி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை கூடவுள்ளது .
கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுனர் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கெடுவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுனர் சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கெடுவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
