உறவுக்கு வர மறுத்ததால் காதலிக்கு அடி உதை..

Last Updated: திங்கள், 22 அக்டோபர் 2018 (20:22 IST)
நெய்வேலி பகுதியில் காதலியை உறவுக்கு அழைத்த போது அவர் வராததால் ஆத்திரம் அடைந்த காதலன், காதலியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது 19 வயது மகள் சுமித்ரா, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு 22, என்பவரை காதலித்து வந்துள்ளார்.
 
நான்கு வருட காதல் என்பதால் இவற்களுக்கு இடையில் உடல்ரீதியான நெருக்கமும் பலமுறை இருந்துள்ளது. இவ்வாறு இருக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ் பாபு என் வீட்டில் அனைவரும் வெளியே சென்றுவிட்டனர், நீ என் வீட்டிற்கு வா என அழைத்துள்ளார். 
 
ஆனால், காதலியோ வரமுடியாது என பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொருமையை இழந்த காதலன், நேரடியாக காதலியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளார். 
 
இதில், சுமித்ராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த சுமித்ரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது, சுரேஷ் பாபுவை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :