1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 12 செப்டம்பர் 2018 (12:41 IST)

பெண்ணை விட்டு ஓடி விடு ; மிரட்டிய இன்ஸ்பெக்டர் : கழுத்தை அறுத்துக்கொண்ட காதலன் (வீடியோ)

பாதுகாப்பு கருதி காவல்நிலையத்தில் அடைக்கலம் தேடிய காதல் ஜோடியை பிரிக்க கரூர் நகர காவல்துறை முயன்றதால், மனமுடைந்த காதலன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்த விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள  ராமானுஜர் நகர்  தெற்கு பகுதியை சார்ந்த கோபிநாத் (வயது 24) இவரது தகப்பனார் சுப்பிரமணி, இந்நிலையில் கோபிநாத் சேலத்தில் உள்ள தனியார் பேக்டரியில் பணியாற்றி வரும் நிலையில் கரூர் பாரதி நகர் எல்.ஜி.நகர் கோபிகா வயது (வயது 19) ஈரோடு தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி இருவருக்கும் காதல்  மலர்ந்தது. அந்த பெண் கரூரை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் ஆகும். எனவே, காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்துள்ளது.
 
இந்நிலையில், அந்த காதல் ஜோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஒரு கோயிலில் திருமண செய்து கொண்டனர். மேலும், பாதுகாப்பு கருதி நேற்று (11-09-18) மாலை கரூர் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், அப்பெண் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் என்பதால், காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் காதலர்களை மிரட்டியுள்ளார். இந்த பெண்ணை விட்டு ஓடி விடு.. இல்லையேல், பொய் வழக்கில் உன்னை சிறைக்கு அனுப்பி விடுவேன் என கோபிநாத்தை மிரட்டியுள்ளார். அதோடு, இருவரையும் பிரித்து அப்பென்ணை அவரின் குடும்பத்தினருடன் அனுப்பி விட்டதாக தெரிகிறது.
 
எனவே, பாதிக்கப்பட்ட கோபிநாத், தன் முன்னே, மனைவியும், காதலியுமான கோபிகாவினை அழைத்து செல்வதை பார்த்தும் தனக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி காவல்நிலையத்திலேயே கத்தியை எடுத்து கழுத்தறுத்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்டுள்ளார். ஆனால் கத்தியானது திருப்பி வைத்து அறுத்ததினால் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் அங்கிருந்தவர்கள், அந்த கோபிநாத் என்ற இளைஞரை கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், தனக்கு, பாதுகாப்பு வேண்டுமென்று கருதி, கரூர் நகர காவல்நிலையத்தில் தானும் தனது மனைவியும் தஞ்சமடைந்ததாகவும், ஆனால் இங்குள்ள கரூர் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதிக்கத்தினால் கரூர் நகர காவல்துறையினரே எங்களை பிரித்து வைத்துள்ளதாகவும், தனக்கும் தனது மனைவி, கோபிகாவிற்கும் பாதுகாப்பு வேண்டுமென்று கூறி, வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கு முழுக் காரணம் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் பிரித்திவிராஜ் ஆகியோரும் என்று கூறி வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருவதினால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து வருகின்றது.
 
பேட்டி : பாதிக்கப்பட்ட இளைஞர் கோபிநாத் - கரூர்
 
-சி.ஆனந்தகுமார்