இனி என்னெல்லாம் நடக்குமோ.. பொது இடத்தில் உடலுறவுக்கு அனுமதி

Last Updated: திங்கள், 3 செப்டம்பர் 2018 (16:23 IST)
மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் பொது இடத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது அந்நகர நிர்வாகம். 
 
பொது இங்களில் ஜோடிகள் உடலுரவு மேற்கொள்ளும் போது அது பிறருக்கு ஏதேனும் இடையூறு அளித்து அவர்கள் புகார் செய்தால் மட்டுமே குறிப்பிட்ட ஜோடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்நகரத்தில் போலீஸார் மீது குவிந்துள்ள ஊழல் மற்றும் சில முறைகேடுகளை மக்கள் மத்தியில் இருந்த நீக்கவே இவ்வாறான நடவடிக்கையை நகர நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் சில செய்திகள் கசிகின்றன. 
 
அதேபோல், சிறுவர்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டால் இது சட்டத்திற்கு ஏதிரானதாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டுவார்கள் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :