1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2024 (07:48 IST)

சவுக்கு சங்கர் சிறையில் திடீர் உண்ணாவிரதம்: வழக்கறிஞர் சொன்ன பரபரப்பு தகவல்..!

சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் திடீரென சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கஞ்சா வைத்திருந்த வழக்கு உள்பட சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து சிறையில் தான் உள்ளார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் சங்கரை சிறையில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமை படுத்துவதாகவும் இதனை கண்டித்து அவர் சிறையில் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதாகவும் அவருடைய வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சவுக்கு சங்கரை சிறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி தற்போது வெளியே தெரிந்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva