1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. fake ncc trainer sivaraman student may be complaint

போலி என்.சி.சி. பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: சமூக நலத்துறை செயலாளர்

என்.சி.சி.
போலி என்.சி.சி. பயிற்சியாளரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என     சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லை விவகாரத்தில் விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பல்நோக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் போலி என்சிசி பயிற்சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி சுற்றுலா மாளிகையில்  ஆஜராகி இன்று இரவு 7 மணிக்குள் மாணவிகள் அல்லது அவர்களின் பெற்றோர் புகார் தரலாம் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து சிவராமனால் மேலும் சில மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி என்.சி.சி. பயிற்சியாளர் சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல்  வழக்குப்பதிவு  செய்திருப்பதாக ஐஜி பவானீஸ்வரி தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
About Writer
Mahendran