திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (12:46 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடரும் கைது வேட்டை.! மேலும் 3 பேர் கைது.!!

Armstrong
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த  ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலை சம்பவம் தொடர்பாக  ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி துணைத் தலைவர் ஹரிகரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு துணைச் செயலாளர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தமான், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி என 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டார்.
 
கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அவ்வப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.  இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதில் கோபி, குமரன் ஆகிய இருவரும் ஆந்திராவில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து ரவுடி ராஜேஷிடம் கொடுத்து தெரியவந்துள்ளது. 

 
ராஜேஷ் மீது இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீஸ்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.