திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (13:44 IST)

த.வெ.க. பாடல் பார்க்கவில்லை.! விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி.!!

Uday Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய்க்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகரும், தவெக தலைவருமான விஜய் இன்று அறிமுகம் செய்து ஏற்றி வைத்தார். இரண்டு போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில், சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து, 'தமிழன் கொடி பறக்குது' எனத் தொடங்கும் கட்சி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக இரண்டு விரல்களை காட்டியபடி எம்.ஜி.ஆர் நிற்கும் உருவம் பாடலில் இடம் பெற்றுள்ளது. அண்ணா - எம்.ஜி.ஆர் உருவங்களுக்கு இடையே விஜய் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், இன்று வெளியிடப்பட்ட விஜய் கட்சி கொடி பாடலை பார்த்தீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், "நான் பார்க்கலையே.. நிகழ்ச்சியில் இருந்தேன். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்" என்றார். மேலும் விஜய்க்கு எனது வாழ்த்துகள் என உதயநிதி தெரிவித்தார்.