1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Extension of time till May 22

மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 22 வரை கால அவகாசம் நீட்டிப்பு

மின்நுகர்வோர் மின் கட்டணம்

தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 22 ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் வரும் மே மாதம் 22 ஆம் தேதி கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கபடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதிமுதல் மே 17 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த கடைசித்தேதி உள்ளவர்கள் , மே 22 ஆம் தேதிவரை எந்த வித அபராதமும் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொது முடக்கம் அமலில் உள்ளதால், தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மின் கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  வரும் மே 18 ஆம் தேதிக்கும் அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது 

About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் கொரோனா: 24 மணி நேர நிலவரம்!!