1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (11:05 IST)

எங்க போகணும்னாலும் ஆன்லைன் பாஸ் வாங்கணும்! – லிங்க் இதோ!

நாடு முழுவதும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவோர் உள்ளிட்டவர்கள் விண்ணப்பிக்க ஆன்லைன் தளங்களை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மூன்று கட்டங்களாக தொடரும் ஊரடங்கு மே 17 வரை தொடர்கிறது. இதனால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், வெளி மாவட்டங்களிலும் கூட பலர் சிக்கி கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலிருந்து செல்வது மற்றும் தமிழக வருவது உள்ளிட்டவற்றிற்கு அனுமதி பெற ஆன்லைன் தளங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,

வாகனங்களில் வெளியூர் மற்றும் வெளிமாநிலம் செல்வோர் - http://tnepass.tnega.org

பிற நாடுகளில் இருந்து இந்தியா வர விரும்புவோர் - https://nonresidenttamil.org

வேறு மாநிலத்திலிருந்து தமிழகம் வர  - https://rttn.nonresidenttamil.org

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல - https://rtos.nonresidenttamil.org

ஆகிய இணையதளங்களில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.