1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:25 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால்  கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், உடல்  நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சமீபத்தில் அவரது காவல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின்  நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று புழல் சிறையில் இருந்து காணொலி கட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி முன்பு செந்தில் பாலாஜி ஆஜரானார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து  நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 13 வது முறையாக நீட்டித்து    நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.